மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமானவர் ரித்திகா சிங். நிஜ குத்துச்சண்டை வீரரான இவர், அந்த படத்திலும் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்திருந்தார். இயல்பாக நடித்திருந்ததால் பெருவாரியான ரசிகர்களை கொள்ளை கொண்ட அவருக்கு, தேசிய விருதும் கிடைத்திருக்கிறது. அதேசமயம், சொந்தக்குரலில் டப்பிங் பேசினால்தானே விருது கிடைக் கும், ஆனால் நான் டப்பிங்கே பேசவில்லையே. எனக்கு எப்படி விருது கொடுத்தார்கள் என்று விருது கிடைத்ததை நினைத்து சந்தோசப்படும் அதே வேளையில் தனது சந்தேகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் ரித்திகாசிங்.
மேலும், எனக்கு தெரிந்த மொழியான இந்தியில் நடிப்பதில்தான் அதிக ஆர்வமாக இருக்கிறேன் என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்த ரித்திகா சிங், தற்போது காக்கா முட்டை மணிகண்டன் இயக்கும் ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய சேதுபதியுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில், தமிழில் உங்களைக்கவர்ந்த ஹீரோக்கள் யார்? என்று அவரைக்கேட்டால், தல அஜீத், தனுஷ் ஆகியோர் என்கிறார். இவர்கள் இருவருடனும் நடிப்பதற்கு வாய்ப்பு வரவில்லை என்றால், நானே அதற்கான முயற்சியில் இறங்குவேன் என்றும் கூறுகிறார் ரித்திகா சிங்.
Post A Comment: