பாலிவுட்டின் ஹாட் நடிகைகளில் பிபாஷா பாசுவும் ஒருவர். தமிழில் சச்சின் படத்தில் விஜய்யுடன் நடித்து, ஒரு குத்தாட்டமும் போட்டவர், அதன்பின்னர் பாலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பெரும்பாலும் த்ரில்லர் படங்களில் அதிகளவில் நடித்தார். நடிகர் ஜான் ஆபிரஹாமை சில காலம் காதலித்து வந்த பிபாஷா, பின்னர் அவரை விட்டு பிரிந்தார்.
இதையடுத்து நடிகர் கரண் சிங் குரோவரை காதலிக்க தொடங்கினார் பிபாஷா. காதலர்களாக வலம் வரும் இருவரும் இப்போது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு இருவரது வீட்டிலும் சம்மதம் சொல்லியதை அடுத்து இப்போது திருமணம் முடிவாகியிருக்கிறது.
அதன்படி பிபாஷா-கரண் திருமணம் 2016, ஏப்ரல் 30ம் தேதி நடைபெற இருக்கிறது. பஞ்சாபி முறைப்படி நடைபெற இருக்கும் இந்த திருமணத்தில் இருவீட்டாரது உறவினர்கள் மட்டும் கலந்து கொள்கின்றனர். அன்று மாலையே நடைபெற இருக்கும் திருமண வரவேற்பில் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இதனிடையே பிபாஷா-கரண் இருவரும் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் ஏப்ரல் 30ம் தேதி திருமணம் முடிவாகியுள்ளது. எங்கள் வாழ்வில் மிகமுக்கியமான நாள் அன்றைய தினம். எங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய எங்களுக்கு உறுதுணையாக இருந்த உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி என்று கூறியுள்ளனர்.
Post A Comment: