Propellerads
Navigation

சென்னையில் ஒரே நாளில் 260 'தெறி' காட்சிகள்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நாளை  முதல் உலகமெங்கும் தெறிக்கவுள்ள நிலையில் சென்னையில் சற்று கூடுதலாக 'தெறி' படம் தெறிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை நகரில் 'தெறி' திரைப்படம் நாள் ஒன்றுக்கு 260 காட்சிகள் திரையிடப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

சத்யம் திரையரங்குகளில் 104 காட்சிகளும், ஏஜிஎஸ் திரையரங்குகளில் 60 காட்சிகளூம், LUxe திரையரங்குகளில் 33 காட்சிகளும், தேவி திரையரங்க காம்ப்ளக்ஸில் 18 காட்சிகளும், அபிராமி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 15 காட்சிகளும், உதயம் காம்ப்ளக்ஸில் 14 காட்சிகளூம், சங்கம் திரையரங்கில் 13 காட்சிகளும் திரையிடப்படவுள்ளது.

கோலிவுட் திரைப்படம் ஒன்று சென்னையில் மட்டும் 260 காட்சிகள் திரையிடப்படுவது என்பது ஒரு புதிய சாதனையாக கருதப்படுகிறது. மேலும் 'தெறி' ரிலீசாகும் ஏப்ரல் 14, அரசு விடுமுறை என்பதாலும் அதனையடுத்து வார இறுதி நாட்கள் வருவதாலும் நான்கு நாட்கள் வசூலிலும் 'தெறி' தெறிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share
Banner

Post A Comment: