ஆந்திரா என்ற வார்த்தையை உச்சரித்தாலே டென்ஷனாகி விடுகிறார் நயன்தாரா. சில ஆண்டுகளுக்கு முன், தெலுங்கு படங்களிலும், நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார் நயன்.
ஆனால், படங்கள் வெளியாகும்போது, அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல், டேக்கா கொடுத்து வந்தார் நயன்தாரா. கடுப்பான தெலுங்கு பட உலகம், நயன்தாராவுக்கு, ஒரு ஆண்டு காலம், படத்தில் நடிக்க தடை விதித்துள்ளது. தற்போது, அந்த தடை முடிந்துள்ளதை தொடர்ந்து, சில தெலுங்கு பட தயாரிப்பாளர்கள், அவரை அணுகினர்.
ஆனால், படங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, பல கோடி ரூபாய் சம்பளம் கேட்டு, அவர்களை மிரள வைத்தாராம் நயன்தாரா. முன்னணி ஹீரோக்களின் வேண்டுகோளை தட்ட முடியாமல், அவர்களின் படங்களில் மட்டும் நடிக்க, சம்மதம் தெரிவிக்கிறாராம். ஆனாலும், நயன்தாராவுக்கு போகும் வாய்ப்புகளை எல்லாம், மற்றொரு பப்ளிமாஸ் நடிகை தட்டிப் பறிப்பதால், கடுப்பில் இருக்கிறாராம் அவர்.

Post A Comment: