‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’ படங்களைத் தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் படம் ‘சர்வர் சுந்தரம்’. இதில் சந்தானம் சமையல் கலைஞராக நடித்து வருகிறார். இப்படத்தை ஆனந்த் பால்கி இயக்கி வருகிறார். இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மராத்தி நடிகை வைபவி ஷண்டிலியாவை தேர்வு செய்திருக்கிறார்கள்.
தமிழ் படங்களுக்கு மராத்தி சினிமா நிறைய திறமையானவர்களை தந்து இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தொடர்ந்து இப்பொழுது மராத்தி சினிமா மூலம் அறிமுகமாகி, தமிழ் திரை உலகில் கால் பதிக்க வந்திருக்கிறார் புதுமுக நாயகி வைபவி ஷண்டிலியா.
நாயகியை பற்றி இயக்குனர் பால்கி கூறும்போது, ‘வைபவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக பெருமை அடைகிறோம். மூன்று மாதங்களுக்கு மேலாக நாங்கள் கதாநாயகியை தேடி வந்தோம். இந்த காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் இருந்தது, இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துக் கொண்டோம். அவர் பரதத்திலும், கதக் நடனத்திலும் தேர்ந்தவர். அழகும் திறமையும் ஒருங்கிணைந்து இருக்கும் பதுமையான வைபவி ஷண்டிலியா தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் கவர்வார்' என்றார்.


Post A Comment: