சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் வெளியாகி, அதிகம் பரபரப்பை ஏற்படுத்தாத, மவுனகுரு படம், அகிரா என்ற பெயரில், இந்தியில் ரீ - மேக் செய்யப்படுகிறது. முருகதாஸ் தான், இந்த படத்தை இயக்குகிறார்.
தமிழில் ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த படம், இந்தியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தயாராகி வருகிறது. இதில், முருகதாஸின் ஆஸ்தான ஹீரோயின், சோனாக் ஷி சின்கா தான் ஹீரோயின். ஆபத்திலிருந்து, பெண்கள், தங்களை காத்துக் கொள்வது எப்படி என்ற விஷயம் தான், படத்தின் மையக் கருவாம், அப்பாவி இளம் பெண், தன் கண் முன் நேரும் அநீதியை பார்த்து, ஆக் ஷன் அவதாரம் எடுக்கும் டெரர் லேடி கேரக்டரில் நடிக்கிறார் சோனாக் ஷி.
இதற்காக, ஒரு மாதத்துக்கு மேலாக, ஜிம்முக்கு சென்று, தன் உடலை, இரும்பு போல் மாற்றியுள்ளார். படப்பிடிப்பின்போது, ஆக் ஷன் காட்சிகளில், கை, கால்களில் கடுமையான காயம் ஏற்பட்டபோதும், அதை பொருட்படுத்தாமல், நடித்துள்ளார் சோனாக் ஷி.

Post A Comment: