அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 14-ந்தேதி படத்தை வெளியிட முடிவு செய்து விட்டதால், எடிட்டிங் பணிகள் முடிந்து விட்ட நிலையில், டப்பிங் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் பின்னணி இசைக்கோர்ப்பு என வேலைகளை துரிதப்படுத்தியுள்ளார் அட்லி.
அடுத்தபடியாக பரதன் இயக்கும் தனது 60வது படத்திற்காக தயாராகிக்கொண்டிருந்தபோதும், தெறி படத்தை பெரிதாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் விஜய், இறுதிகட்ட பணிகள் நடக்கும் ஸ்டுடியோவுக்கு அவ்வப்போது விசிட் அடித்துக்கொண்டிருக்கிறாராம். மேலும், ஜி.வி.பிரகாஷ்குமார் பின்னணி இசை வேலைகளை முடுக்கி விட்டிருக்கும் நிலையில், ஆடியோ விழா தேதியை அறிவிக்கவும் ஆயத்தமாகி விட்டார்கள்.
இந்தநிலையில், படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு, தெறி படத்தை தணிக்கைக்குழுவின் பார்வைக்கு அனுப்பி, அரசின் வரிவிலக்கிற்கு தகுதியான படமாக தெறியை கொண்டு வந்து விட வேண்டும் என்ற முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறாராம். அதனால் அதிருப்திக்குரிய காட்சிகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அதை இப்போதே கத்தரித்து விடவும் முடிவு செய்துள்ளார்களாம்.


Post A Comment: