பாலிவுட்டின், 'மாஜி' ஹீரோ ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூரை, சொந்தம் கொண்டாடடுவதில், கத்ரீனாவுக்கும், தீபிகாவுக்கும் பெரும் போட்டியே நடக்கிறது. ஏலம் எடுப்பது போல், ஆளுக்கு ஆறு மாதம் என, ரன்பீரை, முறை வைத்து காதலிக்கின்றனர்.
சமீபகாலமாக, கத்ரீனாவை பார்த்தாலே, முகத்தை திருப்பிக் கொள்கிறார் ரன்பீர் கபூர். கத்ரீனாவும், தன் பங்கிற்கு, முறைத்துக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து, இவர்கள் இருவருக்கும் பொதுவான நட்பு வட்டாரங்கள் ரொம்பவே கவலைப்படுகின்றன. தற்போது, இருவரும், ஜக்கா ஜசூஸ் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படம் முடிவடைவதற்குள், இரண்டு பேரையும், மீண்டும் சேர்த்து வைத்து விடுவோம் என, சபதம் எடுத்துள்ளது, அந்த நட்பு வட்டாரம். ஆனாலும், 'ஒட்டு மொத்த பாலிவுட்டும் வாய் பிளந்து பார்க்கும், தீபிகாவையும், கத்ரீனாவையும், தன் பின்னால் அலைய விட்டு வேடிக்கை பார்க்கும் ரன்பீர், பயங்கரமான கில்லாடி தான் என்கின்றனர்' சக நடிகர்கள்.

Post A Comment: