Propellerads
Navigation

காதலில் சிக்கிய பொண்ணு


கேடி பில்லா கில்லாடி ரங்கா, அழகிய அசுரா போன்ற படங்களில் நடித்த ரெஜினாவை ஞாபகமிருக்கிறதா? தற்போது, தெலுங்கு படங்களில் பிசியான நடிகையாகி விட்டார் இவர். தமிழிலும், மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். சென்னை பொண்ணான ரெஜினா, பிரபல தெலுங்கு நடிகரும், மெகா ஸ்டார் என, அங்குள்ள ரசிகர்களால் புகழப்படுவருமான, சாய் சரண் தேஜாவின் காதல் வலையில் விழுந்துள்ளதாக, ஐதராபாத்தில் இருந்து,

செய்திகள் கசிகின்றன. பில்லா நுாவு லெனி ஜீவீதம் என்ற படத்தில் நடிக்கும்போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், சுப்ரமண்யம் படத்தில் நடித்தபோது, காதல்

தீவிரமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தேஜா நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து அமர்ந்து விடுகிறாராம் ரெஜினா. படப்பிடிப்பு முடிந்ததும், இரண்டு பேரும் ஜோடியாக பறந்து விடுகின்றனராம். ஆனால், 'உங்கள் இருவருக்கும் காதலா' என, யாராவது கேட்டால், வாயில் பெவிகால் போட்டு ஒட்டியதை போல், மவுனம் காக்கின்றனராம்.
Share
Banner

Post A Comment: