Propellerads
Navigation

வாலு கூட்டணி மீண்டும் இணைகிறது

சிம்பு நடிப்பில் நீண்ட நாள் கிடப்பில் இருந்து, பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து கடந்த வருடம் வெளிவந்த படம் ‘வாலு’. இப்படத்தை விஜய் சந்தர் இயக்கியிருந்தார். ஹன்சிகா, சந்தானம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. 

இப்படத்தை தொடர்ந்து தற்போது சிம்பு-விஜய் சந்தர் கூட்டணி மீண்டும் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் முடிந்த பிறகு, விஜய் சந்தர் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. 

சிம்பு நடித்த மற்றொரு படமான ‘இது நம்ம ஆளு’ படத்தின் அனைத்து பணிகளும் முடிந்தபிறகும், இன்னும் படம் வெளிவந்தபாடில்லை. மேலும், செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த ‘கான்’ படமும் பாதியிலேயே நின்றுவிட்டது. இருப்பினும், சிம்பு அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: