அமர காவியம் படத்தில் நடித்த கோட்டயம் அழகி மியா ஜார்ஜின் ஒரே லட்சியம், தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதே. அதற்காக, துாண்டில் போட்டு காத்திருந்த மியாவுக்கு, இப்போது திமிங்கிலமே சிக்கியுள்ளது.
வெற்றிவேல் படத்தில், சசி குமாருடன் ஜோடி போடும் வாய்ப்பு, அவருக்கு கிடைத்துள்ளது. இதில், நிகிலா, வர்ஷா என, மேலும் இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும், மியாவுக்கு தான், கதையில் அதிக முக்கியத்துவமாம். இது தவிர, ஒரு நாள் கூத்து, எமன், ரம் ஆகிய படங்களிலும், இந்த கேரளத்து பைங்கிளி தான், ஹீரோயினாம்.
'இதே நிலை நீடித்தால், இன்னும் ஓரிரு ஆண்டில், கோடம்பாக்கத்தின் நம்பர் ஒன் நடிகையாகி விடுவேன். என் லட்சியம் நிறைவேறி விடும்' என, பூரிப்பில் பொங்குகிறார் மியா. இவர், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பதால், ஆங்கிலத்தில் சரளமாக பிய்த்து உதறுகிறார். இதனால், சக நட்சத்திரங்கள், இவரை சற்று பொறாமையுடன் பார்க்கின்றனர்.

Post A Comment: