Propellerads
Navigation

400 தியேட்டர்களில் வெளியாகும் போக்கிரி ராஜா

ஜீவா நடிப்பில் தற்போது வெளிவரவுள்ள படம் ‘போக்கிரி ராஜா’. இதில் ஜீவாவுடன் சிபிராஜ், ஹன்சிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ள இந்த படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இமான் இசையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இப்படம் வருகிற 4ம் தேதி வெளியாக இருக்கிறது. 400 தியேட்டர்களில் இப்படத்தை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசரும், பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது போல படம் கவரும் என்று எதிர்பார்ப்படுகிறது.
Share
Banner

Post A Comment: