சூர்யா நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் படம் ‘24’. விக்ரம் குமார் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் வருகிற மார்ச் 4-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், இந்த டீசர் நேற்று பிரத்யேமாக சில மீடியா நண்பர்களுக்கு மட்டும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அந்த டீசரில் அடங்கியுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.
1 நிமிடம் மட்டுமே ஓடும் இந்த டீசரில் சூர்யா மூன்றுவிதமான கெட்டப்புகளில் வருகிறார். விஞ்ஞானி, வில்லன் மற்றும் இளமையான தோற்றத்தில் வருகிறார். விஞ்ஞானி சூர்யாவுக்கு நித்யா மேனனமும், இளமையான தோற்றத்தில் வரும் சூர்யாவுக்கு சமந்தாவும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
வில்லன் கெட்டப்பில் வரும் சூர்யா, ஆத்ரேயா என்ற பெயரில் நடித்திருக்கிறார். இந்த படம் ஒரு டைம் மெஷின் சம்பந்தப்பட்ட கதை என்பதுபோல் டீசரில் காண்பிக்கப்படுகிறது. ஒரு கடிகாரம் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இதில் சூர்யா டுவின்ஸ் என்பதுபோலவும் காட்டுகிறார்கள்.
டீசரின் ஆரம்பத்தில் ஆத்ரேயா பேசும் ‘ஒரு கருவறையில் உதித்தோம்.... ஒரு சில நொடி இடைவெளியில் ஜனித்தோம்’ என்ற டயலாக் உச்சரிக்கும்விதமே அழகாக இருக்கிறது. இந்த வசனத்தை சூர்யா தனது குரலை மாற்றி பேசியிருப்பது ரசிக்க வைக்கிறது.
அதேபோல், டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ள ஏ.ஆர்.ரகுமானின் இசையும் டீசருக்கு பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது.
டீசரின் ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும்போது, இது பெரிய பட்ஜெட்டில் உருவான படம் போன்ற தோற்றத்தை கொடுக்கிறது. மேலும், இந்த படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்திருப்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. அந்த படம் அனைவரும் ரசிக்கும்படியான ஒரு விஷுவல் விருந்தாக இருக்கும் என்பது மட்டும் நன்றாக புரிகிறது.
அதேபோல், டீசரில் ஒவ்வொரு முறையும் சூர்யாவை காட்டும்போதும், சூர்யாவின் தோற்றம் மிகவுமே ரசிக்க வைக்கிறது. இந்த டீசரை தீபக் போஜ்ராஜ் மிகவும் அழகாகவே எடிட்டிங் செய்துள்ளார். தமிழ் சினிமாவுக்கு ‘24’ படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கும். இந்த படத்துக்கு ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரவு கொடுப்பார்கள் என்பதை இந்த டீசர் உறுதிபடுத்துகிறது.


Post A Comment: