Propellerads
Navigation

ரசிகர்களுக்கு லக்ஷ்மி மேனனின் வேண்டுகோள்

முன்னணி நடிகைகளில் ஒருவரான லக்ஷ்மி மேனன் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அது என்னவென்றால்.. சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகளின் பெயர்களில் போலி கணக்குகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்த போலிகளால் வரும் பிரச்சனைகளும், சர்ச்சைகளும் இன்றைய சினிமா துறையில் சகஜமாகிவிட்டது.

முன்னணி நடிகைகளில் ஒருவரான லக்ஷ்மி மேனன், "ட்விட்டரில் என்னுடைய பெயரில் ஒரு போலி கணக்கு இருப்பதாக கேள்விப்பட்டேன், அது நான் இல்லை. இதை யார் நிர்வகிப்பது என்று எனக்கு தெரியாது, தயவு செய்து யாரும் அந்த போலி கணக்கை தொடர்பு கொள்ளவோ, Follow செய்யவோ வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும் "எனக்கு முகநூலில் மட்டுமே கணக்கு உள்ளது. படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அதை கூட நான் அவ்வளவாக பயன்படுத்துவதில்லை" என தெளிவுபடுத்தியுள்ளார்.
Share
Banner

Post A Comment: