பிரியமுடன், யூத், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன் படங்களை இயக்கிய வின்செண்ட் செல்வா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு காமெடி படம் இயக்குகிறார். படத்தின் பெயர் விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும். இதில் சஞ்சய், அருந்ததி நாயர், ஹீரோ ஹீரோயினாக நடிக்கிறார்கள், தம்பி ராமய்யா, ஆடுளம் முருகதாஸ், யோகிபாபு, ரோபோ சங்கர், மயில்சாமி என ஒரு காமெடி பட்டாளமே நடிக்கிறது. சோனா வில்லியாக நடிக்கிறார்.
“பல ஆண்டுகளாக அந்த இரண்டு கிராமங்களுக்கும் ஜென்ம பகை. வெத்து குத்துன்னு திரிஞ்சவங்கள விருமாண்டியும், சிவனாண்ட்டியும் ஒண்ணு சேர்க்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கு வரும் கன்னிச்சாமி என்பரால் மீண்டும் பிரச்சினை இரண்டு ஊர் காதல் ஜோடிகளை சேர்த்து வைக்க மீண்டும் வருகிறது பகை. அவற்றை சரி செய்து காதலர்களை எப்படி ஒண்ணு சேர்க்கிறாங்க என்கிற கதை. நாரதரின் கலகம் நன்மையில் முடிகிற மாதிரி எல்லாமே ஜாலியாக ஆரம்பித்து ஜாலியாக முடிகிற கதை. இது ஒரு குறுகிய காலத் தயாரிப்பு” என்கிறார் வின்செண்ட் செல்வா.

Post A Comment: