Propellerads
Navigation

துல்கர் சல்மான் இடத்தை பிடிக்க விஜய்-சூர்யா போட்டி?

சமீப காலமாக மலையாள படங்களை தமிழில் ரீமேக் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்களான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’, ‘ஷட்டர்’, ‘திரிஷ்யம்’ ஆகிய படங்கள் ‘36 வயதினிலே’, ‘ஒரு நாள் இரவில்’, ‘பாபநாசம்’ என தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியும் பெற்றன.

‘பெங்களூர் டேய்ஸ்’ மலையாளப் படம் தற்போது தமிழில் ‘பெங்களூர் நாட்கள்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. அதுபோல் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பிரேமம்’ படத்தை ரீமேக் செய்யவும் பலத்த போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சார்லி’ படமும் ரீமேக் செய்யும் திட்டம் நிலவி வருகிறது. இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க விஜய் மற்றும் சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இவர்களில் யாரேனும் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
Share
Banner

Post A Comment: