'பத்து எண்றதுக்குள்ள' படத்தை தொடர்ந்து விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படம் 'இருமுகன்'. விஜய் நடித்த 'புலி' பட தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இருமுகனை 'அரிமா நம்பி' படப் புகழ் ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். வரிசையாக தோல்விகள் தொடர்வதால் இருமுகன் படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக்க வேண்டும் என்று வெறியோடு இருக்கிறார் விக்ரம்.
சென்னையில் பூஜை போட்ட சில நாட்களில் மலேசியாவில் ஆரம்பமாகி நடந்து வந்த இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது. இதை அடுத்து அண்மையில் சென்னை திரும்பியுள்ளனர் இருமுகன் படக்குழுவினர்.
சில தினங்கள் ஓய்வு எடுத்த பிறகு நாளை மறுநாள் 'இரு முகன்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவிருக்கிறது. சென்னையில் நடக்க உள்ள'இருமுகன்' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 3 வாரங்கள் நடைபெறுமாம். இப்படத்தில் விக்ரம் இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கிறார்.
அவற்றில் ஒன்று... நெகட்டிவ் கேரக்டர். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

Post A Comment: