Propellerads
Navigation

புலியை தொடர்ந்து போக்கிரி ராஜா- படத்தின் கதை இது தான்

இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் புலி. இப்படம் பேண்டஸி கலந்த கதையாக தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக இருந்தது.

இதை தொடர்ந்து ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் நடிக்கும் போக்கிரி ராஜா படமும் ஒரு பேண்டஸி கலந்த கதை தானாம். இதில் ஜீவாவும், ஹன்சிகாவும் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வர, இருவருக்கும் வழக்கம் போல் காதல் வருகின்றது.

இதே நேரத்தில் ஜீவா, சிபிராஜ் நெருங்கிய நண்பர்கள், சிபிராஜால் ஜீவா-ஹன்சிகா காதல் பிரிகின்றது, அதேபோல் ஹன்சிகாவால் ஜீவா-சிபிராஜ் நட்பு பிரிகின்றது.

இவர்கள் பிரிவிற்கு காரணம் ஒரு பேண்டஸி கலந்த விஷயம் தான் என்று படத்தின் இரண்டாம் பாதியில் தெரிய வருமாம். இப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த கதை தானாம், கண்டிப்பாக ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Share
Banner

Post A Comment: