Propellerads
Navigation

மைக் டைசனுக்காக இறுதிச்சுற்று படத்தை பிரத்யேகமாக திரையிட முடிவு

கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகின் சிறந்த குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘இறுதிச்சுற்று’ படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். 

இதைத் தொடர்ந்து அவருக்கு இந்த படத்தை பிரத்யேமாக திரையிட்டு காண்பிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, இப்படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஒய் நாட் ஸ்டுடியோ சார்பில் மைக் டைசனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். 

அதில், எங்களுடைய தயாரிப்பான ‘இறுதிச்சுற்று’ படத்தை பார்க்க தாங்கள் விருப்பம் தெரிவித்து பேஸ்புக் இணையதளத்தில் நீங்கள் வெளியிட்டிருந்த கருத்து எங்களை கௌரவிப்பதாக இருந்தது.

உங்களுக்கு படம் பார்க்க ஏதுவான இடத்தை நீங்கள் தேர்வு செய்துகொடுத்தால், உங்களுக்காக ‘இறுதிச்சுற்று’ படத்தை பிரத்யேமாக திரையிட்டு காண்பிக்க தயாராக உள்ளோம். உங்களை வடஅமெரிக்கா பாக்சிங் அசோசியேஷன் மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தோம். மேலும், உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். 

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
Share
Banner

Post A Comment: