Propellerads
Navigation

விஜய்யுடன் போட்டி போட விரும்பாத சூர்யா

விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தெறி’. அதேபோல், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘24’. இவ்விரு படங்களும் வருகிற தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி வெளியாகப் போவதாக சமீபத்தில் கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவி வந்தது. 

இந்நிலையில், ஏப்ரல் 14-ந் தேதி ‘24’ படத்தை வெளியிடப்போவதில்லை என அப்படத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. எனினும், ஏப்ரலில் இப்படத்தை வெளியிட்டு விடுவோம் என்று கூறுகிறார்கள். 

‘தெறி’ வெளியாகும் தேதியில் தங்களது படத்தையும் வெளியிட்டால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்ற காரணத்தாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

சூர்யா நடித்துள்ள ‘24’ படத்தை விக்ரம் குமார் இயக்கியுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா 3 கெட்டப்புகளில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

‘தெறி’ படத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மீனாவின் மகள் நைனிகா இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். மேலும், விஜய்யின் மகளும் இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அட்லி இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ‘தெறி’ டீசர் நாளை வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: