ஐயாவில் நயன்தாரா, தாமிரபரணியில் பானு போன்ற மலையாள நடிகைளை அறிமுகம் செய்த டைரக்டர் ஹரி, சேவல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா என்ற மும்பை நடிகையை அறிமுகம் செய்தார். அதன்பிறகு தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, துரோகி போன்ற படங்களில் நடித்தார். ஆனால் ஸ்ரீகாந்துடன் அவர் நடித்து வந்த எதிரி எண்-3 படம் கிடப்பில் போடப்பட்டதால் பூனம்பாஜ்வாவின் கோலிவுட் மார்க்கெட் சரிந்தது.
இந்நிலையில், ஆம்பள, ரோமியோ ஜூலியட் அரண்மனை-2 படங்களில் கேரக்டர் நடிகையாக மீண்டும் நடிக்கத் தொடங்கிய பூனம் பாஜ்வா, தற்போது புதிய படவேட்டையில் தீவிரமடைந்திருக்கிறார். அதோடு, அரண்மனை-2 படத்தை இயக்கிய சுந்தர்.சி அடுத்து தயாரித்து, நடிக்கும் படத்திலும் அவருக்கு ஜோடியாகியிருக்கிறார்.
அடுத்த மாதம் தொடங்கும் அப்படம், மலையாளத்தில் பிஜுமேனன் நடிப்பில் 2014-ல் வெளியான வெள்ளிமூங்கா என்ற படத்தின் தமிழ் ரீமேக்காம். அதில் மலையாள பதிப்பில் நிக்கி கல்ராணி நடித்த வேடத்தில் நடிக்கிறாராம் பூனம் பாஜ்வா. மலையாளத்தில் நிக்க கல்ராணி ஹோம்லியாக நடித்திருந்தபோதும், தமிழ்ப்பதிப்பில் பூனம் பாஜ்வாவை கிளாமராக நடிக்க வைக்கிறாராம் சுந்தர்.சி.,


Post A Comment: