Propellerads
Navigation

கமலுடனும் கைகோர்த்த லைக்கா நிறுவனம்

விஜய் நடிப்பில் வெளிவந்த ‘கத்தி’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் கால்பதித்த ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது. 

அந்த வரிசையில் தற்போது ரஜினி நடிப்பில் ‘2.ஓ’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தையும் தயாரித்து வருகிறது. 

அந்த வரிசையில் கமல் நடிக்கவிருக்கும் புதிய படத்தையும் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கமல் தற்போது அமலாவுடன் சேர்ந்து ‘அப்பா அம்மா விளையாட்டு’ மற்றும் மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார். 

கமல் நடிக்கும் இந்த இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படத்தை ‘லைக்கா’ நிறுவனம் தயாரிக்கிறதா? அல்லது புதிதாக ஒரு படத்தை தயாரிக்கிறதா? அல்லது, கமலின் கனவு படமான ‘மருதநாயகம்’ நீண்டகாலமாக முடிவடையாமல் கிடப்பில் கிடக்கிறது. நிதி நெருக்கடி காரணமாக இந்த படம் முடிக்க முடியாமல் இருக்கிறது. எனவே, இந்த படத்தை லைக்கா நிறுவனம் உதவியுடன் கமல் மறுபடியும் தூசு தட்டி எடுக்கப் போகிறாரா? என்பது கூடிய விரைவில் தெரியவரும்.
Share
Banner

Post A Comment: