Propellerads
Navigation

விக்ரமுக்கு உளவாளியான நயன்தாரா

சென்ற ஆண்டு ஹிட் பட நாயகி வரிசையில் முதலிடத்தை பிடித்த நயன்தாரா, அதே உற்சாகத்துடன் இந்த ஆண்டும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக ‘இருமுகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் இரண்டு கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நயன்தாரா இப்படத்தில் ரகசிய உளவாளியாக நடிப்பதாக
தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால், இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஆக்ஷன் காட்சிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே, நயன்தாரா ‘பில்லா’ படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘இருமுகன்’ படத்தை ‘அரிமா நம்பி’ இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். நித்யா மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ‘புலி’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரான சிபு தமீன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார். 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வருடத்தின் இறுதியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
Share
Banner

Post A Comment: