ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘போக்கிரி ராஜா’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஹன்சிகா, சிபி மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் ஜீவா நடித்துள்ள மற்றொரு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
'ஈ' படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவா-நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் 'திருநாள்'. இப்படம் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜீவா ரௌடியாக நடித்திருக்கிறார். நயன்தாரா பேபி கிளாஸ் டீச்சராக நடித்திருக்கிறார். ரௌடியாக இருந்து ஒருவன் திருந்தும் போது ஏற்படும் இன்னல்களை படமாக்கியிருக்கிறார்கள். ஜாலியான ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது.
ராம்நாத் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். கிராமத்து பின்னணி கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு மகேஷ் சுப்பிரமணியம் ஒளிப்பதிவும், வி.டி.விஜயன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Post A Comment: