Propellerads
Navigation

அடடே.. கும்கியின் இரண்டாம் பாகம் வருதாம்ல...

பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘கும்கி’. ஒரு யானைக்கும் பாகனுக்கும் இடையே இருந்த உறவையும், மலைவாழ் மக்களின் உணர்வையும் அழகாக எடுத்துச் சொல்லிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

இந்த படத்தின் மூலம், நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார். மேலும், லட்சுமி மேனன், தம்பி ராமையா, ஜோ மல்லூரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

தமிழ் சினிமாவில் மிகவும் பேசப்பட்ட ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பிரபு சாலமன் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ‘கும்கி’ இரண்டாம் பாகத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போதைக்கு பிரபு சாலமன், தனுஷை வைத்து இயக்கி வரும் ‘மிரட்டு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருக்கிறார். இப்படம் வெளிவந்த பிறகு ‘கும்கி’ இரண்டாம் பாகத்தின் பணிகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share
Banner

Post A Comment: