Propellerads
Navigation

டுவிட்டர் சர்ச்சைக்கு விளக்கமளித்த சித்தார்த்

சில தினங்களுக்கு முன்னதாக சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில இருக்கிற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கும்னு எழுதியிருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது. #தமிழ் #தத்துவம்" என்று குறிப்பிட்டு இருந்தார். இக்கருத்தில் தனுஷின் ஹாலிவுட் வாய்ப்பைத் தான் குறிப்பிட்டார் என்று இணையத்தில் செய்திகள் வெளியாகின. சித்தார்த்தின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை சமூக வலைத்தளத்தில் உண்டாக்கியது.

டுவிட்டர் கருத்து குறித்து சித்தார்த்திடம் கேட்டபோது, "நான் நடித்த 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் வரும் வசனம் அது. நான் யாரையும் குறிப்பிட்டு அதனை வெளியிடவில்லை. எனது டுவிட்டர் பக்கத்தில் நான் நடித்த படத்தின் வசனத்தை எழுதினேன். மற்றவர்கள் வேறு விதத்தில் யூகித்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்" என்று தெரிவித்தார். 

சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘அரண்மனை 2’. தற்போது இப்படம் ரசிகர்களின் ஆதரவால் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார். இப்படத்தையடுத்து சித்தார்த் நடிப்பில் ‘ஜில் ஜங் ஜக்’ படம் வெளியாக இருக்கிறது.
Share
Banner

Post A Comment: