Propellerads
Navigation

வரலட்சுமியிடம் இப்படிபட்ட கதையில் நடிக்க கேட்டாரா மலையாள இயக்குனர்?

தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு வரலட்சுமியின் நடிப்பு திறமை பாராட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் இவர் மம்மூட்டியுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் பரபரப்பாக வந்தன. 

இந்நிலையில் இவரிடம் ஒரு மலையாள இயக்குனர், சரிதா நாயரின் வாழ்க்கை கதையை படமாக்க இருக்கிறேன், அதில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.

இதனை கேட்ட வரலட்சுமி, உங்களுக்கு எல்லாம் இதே வேலையா போச்சு என்று அந்த இயக்குனரிடம் எறிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.அண்மையில் சரிதா நாயர் மந்திரிகள் மீதும், தொழிலதிபர்கள் மீதும், பாலியல் குற்றச்சாட்டை பகிரங்கமாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: