Propellerads
Navigation

காதலருடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறேனா?

ரன்வீர் கபூருடன்  திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் சேர்ந்து மும்பையில் ஒரே வீட்டில் குடும்பம் நடத்துவதாக கிசுகிசு பரவியது, ஆனால், தீபிகா படுகோனே  அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்பீர் கபூரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அவருகளுடைய காதல் தற்போது முறிந்து விட்டது.

இதுகுறித்து அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ":என்னுடைய திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக பொருத்தமான கணவர் அமைந்தால் சினிமாவை விட்டு விலக கூட தயாராக இருக்கிறேன். காதலில் எனக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டு விட்டன, மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் எனக்கு நடந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

என்னைப் பற்றி பல வதந்திகள் பாலிவட்டில்  பரவி வருகிறது, காதலருடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறேன் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதில் உண்மை இல்லை.  திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் கலாசாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், ஒருவரை காதலித்தால் என்னை முழுமையாக அவரிடம் ஒப்படைத்து விடுவேன். அவர் எனக்கு மட்டுமே சொந்தமானவராக இருக்கவேண்டும். என்னை காதலித்துக்கொண்டே இன்னொரு பெண்ணையும் அவர் விரும்பினால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். 

குடும்ப உறவுகள் முக்கியம் என்றும் அந்த உறவுகளை கவுரவிக்க வேண்டும். நான் அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் இருந்துதான் வந்து இருக்கிறேன். திருமணம் செய்யாமல் சிலர் சேர்ந்து வாழ்கிறார்கள். அதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அது அவரவர் விருப்பம்" என்று குறிப்பிட்டார்.
Share
Banner

Post A Comment: