Propellerads
Navigation

இது நம்ம ஆளு ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமீபகாலமாக சிம்பு நடிப்பில் உருவான படங்கள் அனைத்தும் வெளிவருவதில் பெரும் பிரச்சினைகள் எழுந்தவண்ணம் இருந்து வருகிறது. இதனால், சிம்புவின் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்விக்குறியுடனே எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

அப்படித்தான், சிம்பு நடித்த ‘வாலு’ படம் பல்வேறு ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, கடைசியில் தடைகளை எல்லாம் முறியடித்து வெளிவந்தது. அதேபோல், சிம்பு தற்போது நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்துக்கும் தற்போது நல்ல காலம் பிறந்திருக்கிறது. 

ஆம், நீண்டநாள் கிடப்பில் கிடந்த இப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளார்கள். ஏற்கெனவே, இப்படத்தின் ஆடியோ நாளை (பிப்-3) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தை மார்ச் 24-ந் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இன்று இப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

பசங்க புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனமும் சேர்ந்து இப்படத்தை தயாரித்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது
Share
Banner

Post A Comment: