என்னை அறிந்தால் படத்தில் ஒரு சிறுமிக்கு அம்மாவாக நடித்தார் திரிஷா. அதையடுத்து மாயா படத்தில் நயன்தாரா அம்மாவாக நடித்தார். அவர்களைத் தொடர்ந்து சேதுபதி படத்தில் ரம்யா நம்பீசன் அம்மாவாக நடித்துள்ளார். இந்த நிலையில், அடுத்து அனுஷ்காவும் சூர்யாவுடன் நடித்து வரும் எஸ்-3 படத்தில் அம்மாவாக நடிக்கிறாராம்.
இதற்கு முன்பு சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்களில் சூர்யாவின் காதலியாகவே நடித்திருந்தார் அனுஷ்கா. அவர்களது திருமணம் முடிவு செய்யப்பட்ட நிலையில், அவ்வப்போது சந்தித்துக்கொண்டனர். ஆனால் இப்போது எஸ்-3 என்ற பெயரில் உருவாகி வரும் சிங்கம்-3 படத்தில் சூர்யா-அனுஷ்காவின் திருமணம் முடிந்து அவர்களுக்கு குழந்தை பிறப்பது போன்று கதை உள்ளதாம்.
அதன்காரணமாக, திருமணத்திற்கு பிறகு கர்ப்பிணியாகும் வரை ஸ்லிம்மாக நடிக்கும் அனுஷ்கா, அதையடுத்து கர்ப்பிணியாகும்போது உடம்பில் வெயிட் போட்டு நடிக்கிறாராம்.


Post A Comment: