Propellerads
Navigation

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் பேசிய கமல்ஹாசன்

அமெரிக்காவின் பிரபல ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்திய மாநாட்டில் நடிகர் கமல்ஹாசன், மற்றும் திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

வாஷிங்டனில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழக விழா அரங்கத்தில் இன்று ’கருத்து சுதந்திரம்’ என்ற தலைப்பில் நடிகர் கமல்ஹாசன் பேசினார். இவ்விழா மேடையில் பேசத் தொடங்கும்போது, ஆஸ்கர் விருது என்பது ஒரு நல்ல அளவுகோல்தான். ஆனால், அதுவே சினிமாவுக்கான உலக அளவிலான மதிப்பீடாகிவிட முடியாது என பலத்த கரவொலிக்கு இடையே அவர் கூறினார். 

எல்லோரும் அரசியலில் இருக்க வேண்டும். தேர்தல்களில் போட்டியிடும் நோக்கத்தில் அல்லாமல், விழிப்புணர்வுடன் இருப்பதற்காகவும், ஜாக்கிரதையாக இருப்பதற்காகவும் அரசியலில் இருக்க வேண்டும்.ஆனால், ஆட்டு மந்தைகளைப்போல் அரசியல் மேய்ப்பர்களின் பின்னால் நாம் சென்று விடக்கூடாது எனவும் கமல்ஹாசன் கூறினார்.
Share
Banner

Post A Comment: