Propellerads
Navigation

கபாலி படபிடிப்பிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய நடிகை

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'கபாலி' படம் இப்போது மலேசியாவில் படமாக்கபட்டு வருகிறது. ப.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ராதிகா அப்தே, தன்சிகா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். 

மேலும் மெட்ராஸ் கலையரசன், அட்டகத்தி தினேஷ், நாசர் என நடிகர் பட்டாளம் நீண்டு கொண்டே போகிறது.சென்ற மாதம் மலேசியாவில் படபிடிப்பை முடித்து வந்த குழு, சில நாட்கள் சென்னை மற்றும் கோவாவில் படபிடிப்பை நடத்தினர். 

இறுதி கட்ட படபிடிப்பிற்காக சென்ற வாரம் தான் மலேசியா சென்றனர்.இப்போது, நடிகை தன்சிகாவின் அனைத்து பகுதிகளும் எடுக்கபட்டுவிட்டதால், அவர் மிகவும் சோகத்தோடு அனைவரிடமும் விடை பெற்று சென்றுள்ளார்.
Share
Banner

Post A Comment: