‘கபாலி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக நேற்று ரஜினி மலேசியா புறப்பட்டு சென்றார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது, ரஜினி பயணம் செய்த அதே விமானத்தில் சந்தானம் நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஆஸ்னா சவேரியும் பயணம் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினியை விமானத்தில் பார்த்ததும் பரவசமான ஆஸ்னா சவேரி அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். பின்னர், தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பதிவு செய்து, இன்றைய நாள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சிறப்பான நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்னா சவேரி தற்போது ‘மீன்குழம்பும் மண்பானையும்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காகவே அவர் மலேசியா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post A Comment: