Propellerads
Navigation

சினிமா பாணியில் நடிகையை கொடூர கொலை செய்த வில்லன்

சென்னையில் சமீபத்தில் சினிமா நடிகை ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.நாளை முதல் குடிக்க மாட்டேன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சசிரேகா. இவர் அதே படத்தில் வில்லனாக நடித்த ரமேஷ் சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரமேஷ் குறும்படங்களில் நடித்த துணை நடிகை லக்கியா என்பவருடன் தவறான தொடர்பில் இருந்ததால் சசிரேகா போலிசில் புகார் அளித்திருந்தார்.

சமாதானத்துக்கு பின் இருவரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.இது தொடர்பில் இருவருக்கும் தொடர்ந்து சண்டை வந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் சண்டை முற்றியதில் சசிரேகாவை கொன்று விட்டார். 

லக்கியாவுடன் இணைந்து நான் மகான் அல்ல பட பாணியில் தலையை ஒரு இடத்திலும், உடலை வேறு இடத்திலும் வீசிவிட்டார்.தற்போது போலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கோடம்பாக்கத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Share
Banner

Post A Comment: