Propellerads
Navigation

இப்படியா வேண்டுகோள் விடுப்பீங்க நந்திதா!!

அட்டகத்தி படத்தில் நடித்த நந்திதாவுக்கு முதல் படமே ஹிட்டாக அமைந்ததால் அதன்பிறகு அவர் நடித்த எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பால குமாரா, முண்டாசுப்பட்டி ஆகிய படங்கள் தொடர் வெற்றியாக அமைந்ததால் தனது தாய்மொழியான கன்னட சினிமாவை கூட மறந்து விட்டு தமிழ்ப்படங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார் நந்திதா. அதோடு தொடர்ந்து ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்த அவர், இப்போது கொஞ்சம் கிளாமருக்கும் மாறியிருக்கிறார்.

இப்போது அவர் நடிப்பில் இடம் பொருள் ஏவல், அஞ்சல போன்ற சில படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. அதைத் தொடர்ந்து உள்குத்து, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார். 

ஆனால், முன்பிருந்த பரபரப்பு இப்போது அவரது மார்க்கெட் இல்லை. அவர் எதிர்பார்த்தபடி அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த நந்திதா, மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக இப்போது தனது பெயரை நந்திதா ஸ்வேதா என்று மாற்றியிருக்கிறார். இந்த ஸ்வேதா என்பது அவரது நிஜ பெயர்தான். 

ஆனால் இதுவரை படங்களின் டைட்டில்களில் நந்திதா என்று அவர் பெயர் இடம்பெற்று வந்த நிலையில், இனிமேல் தனது பெயரை நந்திதா ஸ்வேதா என்று போடுமாறும் தற்போது தான் நடித்து திரைக்கு வர இருக்கும் படங்களின் டைரக்டர்களிடம் பர்சனலாக கேட்டுக்கொண்டு வருகிறார் நந்திதா.
Share
Banner

Post A Comment: