Propellerads
Navigation

3 படங்கள் தயாரிக்கும் சித்தார்த்

சித்தார்த் நடித்து தயாரித்துள்ள ‘ஜில் ஜங் ஜக்’ படம் வெளியாவதை யொட்டி அவர் அளித்த பேட்டி...

ஒரு குறும்பட இயக்குனர் சினிமா இயக்குனராக வந்த முதல் படம் ‘காதலில் சொதப்புவது எப்படி’. அதன் ஹீரோ நான்தான். ‘ஜில் ஜங் ஜக்’ பட இயக்குனர் தீரஜ் வைத்தியும் குறும் படங்கள் இயக்கியவர் தான்.

இந்தப் படத்தில் சில ஆண்கள் பெண் வேடத்தில் வருவது போல காட்சிகள் உண்டு. ஆனால் கதாநாயகி இல்லை. அது ஒரு குறையாகவே இல்லாத அளவுக்கு படம் நல்லா வந்திருக்கு.

இந்தப் படத்துல பெரிய மெசேஜ் தத்துவம் எல்லாம் எதுவும் இல்ல. குடும்பத்தோட வந்து உட்காந்தா நல்லா வாய் விட்டு சிரிச்சு மனம் விட்டு ரசிச்சிட்டு போலாம்.

எனது எட்டாக்கி நிறுவனம் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாரிக்கிறேன். அதில் இரண்டு படங்களை விரைவில் ஆரம்பிக்கிறேன். என் படங்களில் கதைதான் ஹீரோவாக இருக்கும். அதனால் நான் நடிப்பேன். இல்லன்னா ஆரம்ப நிலையில் உள்ள ஹீரோக்கள் அல்லது புதுமுக ஹீரோக்கள் நடிப்பார்கள். பெரிய ஹீரோக்களுக்கு என்னால் சம்பளம் கொடுக்க முடியாது.

புதுசு புதுசா நிறைய டெக்னீசியன்களை படைப்பாளிகளை அறிமுகப்படுத்த ஆசை இருக்கு.

இது தவிர ‘ரைட்டர்ஸ் லேப்’ என்ற பெயரில், நிறைய கதை, திரைக்கதை ஆசிரியர்களை உருவாக்கவும் போகிறேன். 18 வயது முதல் 35 வயது வரை உள்ள பலரை தேர்வு செய்து அவங்களுக்கு பயிற்சி கொடுக்க இருக்கிறேன். அவர்கள் வேலை நிறைய கதை திரைக்கதைகளை உருவாக்குவதுதான்.

அவர்கள் டைரக்டரா எல்லாம் ஆக மாட்டார்கள். எழுத்து மட்டும்தான். நல்ல கதைகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் அது ரொம்ப நல்ல விஷயமா இருக்கும் என்று நம்புகிறேன். இந்த படம் 12–ந் தேதி திரைக்கு வருகிறது.’’ என்று கூறினார்.

ராதாரவி பேசும் போது, “ பொதுவா நான் எதுக்கும் பயப்படாதவன். ஆனா இந்த பெருமழையில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பார்த்து நான் அசந்துட்டேன். ஆனா நம்ம சித்தார்த் இந்த பெருமைழையில், எந்த விளம்பர வெளிச்ச எதிர்ப்பார்ப்பும் இல்லாம, கடலூருக்குப் போய்..... தனி ஆளா அவ்வளவு நிவாரண உதவிகள் செய்தார். அந்த மனசு யாருக்கு வரும்?

நான் சித்தார்த்தை ஏதோ தெலுங்குப் பையன்னே நினைச்சுட்டு இருந்தேன். ஆனா அவரு நம்ம ஆளு என்பதில் ரொம்ப சந்தோசம்’’ என்றார்.
Share
Banner

Post A Comment: