நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்து பாலிவுட் நடிகர் அமீர் கான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூறிய கருத்தை பா.ஜ.க வினர் மோசமான விதத்தில் எதிர்கொண்ட நிலையில், மீண்டும் தற்போது அவரை வம்புக்கு இழுக்கும் வகையில் அக்கட்சியின் தலைவர் ஒருவர் பேசியுள்ளார்.
இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் நாட்டை விட்டு வெளியேறிவிடலாமா? என்று தனது மனைவி கேட்டதாக பாலிவுட் நடிகர் அமீர்கான் அப்போது தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், டெல்லியின் எஸ்.ஜி.பி.டி கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியபோது பா.ஜ.க தலைவர் ராம் மாதவ், இந்தியாவின் கவுரவம் குறித்து தான் நடித்த விளம்பரப் படத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு அறிவுரை கூறுவதைப் போல், தனது மனைவிக்கும் அமீர்கான் எடுத்துக்கூற வேண்டும் என்று கூறினார்.
சுற்றுலா மேம்பாடு குறித்த அரசு விளம்பரம் ஒன்றில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு இந்தியாவின் கவுரவம் குறித்து அமீர்கான் அறிவுரை கூறுவது போன்ற காட்சி ஒன்று இடம்பெறும். அதை வைத்தே ராம் மாதவ் இப்படி பேசியுள்ளார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: