சில்வஸ்டர் ஸ்டாலோனின் ராக்கி படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதில் வரும் ராக்கி என்ற ஸ்டாலோனின் கதாபாத்திரம் பல இளைஞர்களுக்கு உத்வேகமாக அமைந்தது.
சமீபத்தில் வெளியான க்ரீட் படத்தில் ராக்கியாக நடித்திருந்தார் ஸ்டாலோன். இந்தப் படத்தில் மைக்கேல் பி.ஜோர்டன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ராக்கி ரசிகர்களையும் படம் திருப்தி செய்தது. நல்ல லாபமும்கூட.
அதனால் க்ரீட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது என முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தும்விட்டது எம்ஜிஎம் நிறுவனம். இந்த இரண்டாவது பாகத்திலும் ராக்கி வருகிறார்.
ராம்போ ஐந்தாவது பாகம் வருவதற்கு வாய்ப்பில்லை என ஸ்டாலோன் அறிவித்திருக்கும் நிலையில், எம்ஜிஎம்மின் இந்த அறிவிப்பு ஸ்டாலோன் ரசிகர்களை ஓரளவு திருப்திப்படுத்தும்.


Post A Comment: