‘‘நான் பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறேன். ஆந்திராவில் உள்ள ராஜோலு எனது சொந்த ஊர். எனக்கு உறவினர்கள் அதிகம். சிறு வயதில் பொங்கலன்று உறவினர்கள் எல்லோரும் கூடுவோம். குளித்து புத்தாடைகள் அணிந்து கோலம் போட்டு மகிழ்ச்சியாக இருப்போம்.
ஒவ்வொரு பொங்கலுக்கும் ஒரு உறவினர் வீட்டுக்கு போவோம். அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. நடிகையானதும் பொங்கல் கொண்டாடுவது குறைந்து விட்டது. இப்போது கோலம் போடுவதும் எனக்கு மறந்து விட்டது. சினிமாவில் தொடர்ந்து கதாநாயகியாக நீடிப்பது கஷ்டம். ஆனால் தமிழ், தெலுங்கு படங்களில் நான் கடந்த 9 வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். ரசிகர்கள் ஆதரவே இதற்கு காரணம். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.
ஒரே நேரத்தில் 10 படங்களில் நடிப்பதை விட நல்ல கதையம்சம் உள்ள ஒரு படத்தில் நடிப்பது சிறந்தது. எனக்கு வந்த எல்லா படங்களிலும் நடிக்க ஒப்புக்கொண்டு இருந்தால், இதுவரை 30 படங்களுக்கு மேல் நடித்து இருப்பேன். சம்பளம் பெரிது அல்ல. நல்ல படங்கள் தான் முக்கியம். கதை பிடித்தால் சம்பளத்தை விட்டுக்கொடுக்கவும் தயார். ஒரு பாடல் காட்சியில் நடிக்கவும் எனக்கு சம்மதமே.
தெலுங்கை விட தமிழில் தான் அதிக படங்களில் நடித்துள்ளேன். தமிழ் பட உலகம் என்னை அரவணைத்து ஆதரவு கொடுத்தது. நடிகைகளுக்குள் போட்டி இருக்கிறது என்பதை நான் நம்ப மாட்டேன். ஒவ்வொரு நடிகைக்கும் அவர்களின் முந்தைய படங்கள்தான் போட்டி. எல்லா கதாநாயகிகளுடன் நான் நட்பாக இருக்கிறேன். எனக்கு மென்மையான குணம்.
பிரச்சினைகளை என்னால் தாங்க முடியாது. ஏற்கனவே சில பிரச்சினைகளை சந்தித்து மீண்டு இருக்கிறேன். என்னை பற்றி நிறைய வதந்திகள் பரவுகின்றன. எனக்கு திருமணம் நடந்து விட்டதாகவும் ஒரு குழந்தை இருக்கிறது என்றும் வதந்தி பரப்புகின்றனர். அதில் உண்மை இல்லை. என் முழு கவனமும் சினிமாவில் இருக்கிறது. தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்துவேன்’’.
இவ்வாறு அஞ்சலி கூறினார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: