Propellerads
Navigation

இந்து – கிறிஸ்தவ முறைப்படி அசின் திருமணம்

அசின் அவரது காதலர் ராகுல் சர்மா திருமணம் குறித்து விதவிதமான தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இப்போது அதற்கு முற்றுப் புள்ளி வைத்து இருக்கிறார்கள்.

அசின் – ராகுல் சர்மா ஜோடி வருகிற 20–ந் தேதி உறவினர்கள், நண்பர்கள் சாட்சியாக கணவன் – மனைவி ஆகிறார்கள். இந்த திருமண விழா டெல்லியில் நடைபெறுகிறது. அங்கு உள்ள பிரபல ஓட்டலில் இது நடைபெறுகிறது.

இரண்டு நாள் திருவிழாவாக இதை நடத்த முடிவு செய்துள்ளனர். முதல் நாளான 19–ந் தேதி 100–க்கும் அதிகமான விருந்தினர்கள் நண்பர்கள் பங்கேற்கிறார்கள். இது ‘மெகந்தி’ விழா. இது பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது.

20–ந் தேதி திருமணம் நடக்கிறது. இதையும் எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இரு குடும்பத்தினர் மற்றும் ராகுலின் டெல்லி வட்டார நண்பர்கள் உள்பட 250–க்கும் அதிகமானவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமணத்தை இந்து – கிறிஸ்தவ முறைப்படி நடத்த முடிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து மும்பையில் 23–ந் தேதி அசின் – ராகுல் சர்மா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மும்பை திரையுலக பிரமுகர்கள் நண்பர்கள் பங்கேற்கிறார்கள்.

முதல் திருமண அழைப்பிதழ் இந்தி நடிகர் அக்ஷய் குமாரிடம் கொடுக்கப்பட்டது. இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எனது நண்பர்கள் ராகுல் – அசின் திருமணத்துக்கான முதல் அழைப்பிதழை பெற்றுக் கொண்டேன். எனது நெருங்கிய நண்பர்களான இருவரும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: