Propellerads
Navigation

பொங்கல் ரேஸில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முந்தியது யார்?

பொங்கல் பண்டியகையை முன்னிட்டு ரஜினிமுருகன், கெத்து, கதகளி, தாரை தப்பட்டை ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது.

இதில் ரஜினி முருகன், கதகளி படத்திற்கு அனைத்து தரப்பினர்களிடமிருந்து நல்ல விமர்சனம் வருகின்றது.

தாரை தப்பட்டை வெறும் பாலா ரசிகர்களை மட்டுமே கவர்ந்துள்ளது, படத்தில் மிகவும் மனதை உலுக்கும் காட்சிகள் இருப்பதால், குடும்ப ரசிகர்கள் படத்தை தவிர்த்து வருகின்றனர்.

கெத்து கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதன்படி முதல் நாள், பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் தெரிவிக்கையில் ரஜினிமுருகனே அதிக வசூல் செய்ததாகவும், இதற்கு அடுத்த இடத்தில் கதகளி, கெத்து, தாரை தப்பட்டை உள்ளதாக கூறப்படுகின்றது. வசூல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
Share
Banner

Post A Comment: