Propellerads
Navigation

மொட்ட சிவா கெட்ட சிவா பெயர் மாற்றம்

‘காஞ்சனா-2’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸுக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வரிசையில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில், இவருடைய படத்தலைப்பான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத் தலைப்பை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரிக்கு விட்டுக் கொடுத்தார் ராகவா லாரன்ஸ்.

இதையடுத்து அந்த படத்திற்கு வேறு பெயர் வைக்க பரிசீலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதற்கான தலைப்பை தேர்வு செய்துள்ளனர். அதன்படி, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ‘பைரவா’ என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

ஏற்கெனவே, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற தலைப்புடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய பெயர் மாற்றத்துடன் உருவாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பொங்கலுக்கு வெளியிடவிருக்கின்றனர். இப்படத்தை லாரன்ஸ் எழுதி, இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: