10-வது ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பரபரப்பான ஆட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.
வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்தது. மனிஷ் பாண்டே 47 பந்தில் 81 ரன் (5 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். கருணல் பாண்டியா 3 விக்கெட்டும், மலிங்கா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நிதிஷ் ராணா- ஹர்த்திக் பாண்டியாவின் அதிரடியால் ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் வெற்றி பெற்றது. அந்த அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து 7 விக்கெட்டில் கொல்கத்தாவை வீழ்த்தியது.
நிதிஷ் ராணா 29 பந்தில் 50 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), ஹர்த்திக் பாண்டியா 11 பந்தில் 29 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அங்கித் ராஜபுத் 3 விக்கெட் கைப்பற்றினார்.
மும்பை இந்தியன்ஸ் கடைசி 3 ஓவரில் (18 பந்து) 49 ரன்னை எடுத்து பரபரப்பான இந்த ஆட்டத்தில் வெற்றியை ருசித்தது. தொடக்க ஆட்டத்தில் புனேயிடம் தோற்ற அந்த அணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
இந்த வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது மிகவும் முக்கியமானது. இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருந்ததால் ராணா- ஹர்த்திக் பாண்டியா வெற்றியை பெற்று தருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அதன்படி ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்தனர். இளம் வீரர்கள் ஆட்டத்தை முடித்து தருவது முக்கியமானது. அடுத்தப் போட்டியிலும் இளம் வீரர்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் காம்பீர் கூறியதாவது:-
நாங்கள் கடைசி 3 ஓவர்களில் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தோம். ஆனால் ஹார்த்திக் பாண்டியாவும், ராணாவும் நம்ப முடியாத வகையில் அபாரமாக விளையாடி எங்களது வெற்றியை தடுத்துவிட்டனர்.
ஹர்த்திக் பாண்டியா கேட்சை பிடித்து இருந்தால் ஆட்டம் மாறி இருக்கும். மோசமாக பீல்டிங்கும், கேட்சை தவறவிட்டதும் தோல்விக்கு காரணமாகி விட்டது.
எங்களது பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. வோக்சும், போல்டும் அனுபவம் வாய்ந்தவர்கள். பனித்துளியால் சுழற்பந்து வீரர்கள் சிரமப்பட்டனர்.
இவ்வாறு காம்பீர் கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் 3-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 12-ந்தேதியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 13-ந்தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப்பையும் சந்திக்கின்றன.

Post A Comment: