ரூ.500, ரூ.1000 செல்லாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்ததால் நாடெங்கும் கடந்த பத்து நாட்களாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவருடைய வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும் அந்த கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அதிக பணம் ரொக்கமாக தேவைப்பட்டதால் பெரும் சங்கடம் ஏற்பட்டது. ஒருசில திருமணத்தையே நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்
இந்நிலையில் திருமணங்களுக்கு 2.5 லட்சம் வரை மணமகன், மணமகள் அவர்களது தாய் தந்தை கணக்குகளில் இருந்து மட்டுமே எடுக்கலாம் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதனால் திருமண வீட்டார்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
அதேபோல் வணிகர்கள் ரூ.50,000 வரை பணம் எடுக்கவும், விவசாயிகள் ரூ.25000 வரை பணம் எடுக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Post A Comment: