Propellerads
Navigation

வெள்ளை மாளிகையில் மனித குரங்கு. மிச்சேல் ஒபாவை திட்டிய மேயர் ராஜினாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்புக்கு நாடு முழுவதிலும் உள்ள அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு விர்ஜீனியாவின் கிளே கவுண்டியின் கார்பரே‌ஷன் வளர்ச்சி திட்ட இயக்குனர் பமீலா ராம்சே டெய்லர் என்பவர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, வெள்ளை மாளிகையில் தற்போது இருக்கும் முதல் பெண்மணி மனித குரங்கு போன்று உள்ளார் என்று தனது ஃபேஸ்புக்கில் விமர்சனம் செய்திருந்தார். இவருடைய கருத்தை கிளே கவுண்டியின் மேயர் பிவர்லி வாலிங் என்பவர் ஆதரித்து கருத்து தெரிவித்திருந்தார்.

நாட்டின் முதல் பெண்மணி மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இருவருக்கும் எதிராக கடுமையான கண்டனங்கள் எழுந்தன. பெரும் எதிர்ப்பால் அதிர்ச்சி அடைந்த மேயர் பிவர்லி வாலிங், தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் இனவெறி அர்த்தத்தில் தான் எந்த கருத்தையும் கூறவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார்.

ஆயினும் இருவரும் பதவி விலக வேண்டும் என்று சுமார்  85 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு மனு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து பிவர்லி வாலிங், கிளே கவுண்டியின் மேயர் பதவியை தற்போது ராஜினாமா செய்ததை அடுத்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
Share
Banner

Post A Comment: