Propellerads
Navigation

பிரபல பாடகியின் கணவருக்கு டீ கொடுக்க பணம் கொடுத்த ஏ.டி.எம் காவலாளி

பிரபல பாடகி சின்மயி மற்றும் அவரது கணவர் ராகுல் இன்று அமெரிக்காவில் இந்தியா வந்ததாகவும், தங்களிடம் ரூ.100 நோட்டு இல்லாததால் டீ குடிக்க கூட முடியாமல் இருந்த நிலையில் ஏ.டி.எம் காவலாளி தனது கணவருக்கு ரூ.20 கொடுத்து உதவியதால் தாங்கள் டீ குடித்ததாகவும் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

தான் அமெரிக்காவில் இருந்தபோது மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வந்ததாக கூறிய சின்மயி, இன்று காலை விமான நிலையத்தில் இருந்து இறங்கியதும் டீ சாப்பிட தங்களிடம் ரூ.100 நோட்டு இல்லாததால் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க முயன்றதாக கூறினார். ஆனால் ஏ.டி.எம்-ல் காலை பத்து மணிக்கு பணம் நிரப்பினால் இரண்டு மணி நேரத்தில் காலியாகிவிட்டதாக ஏ.டி.எம் காவலாளி கூறியுள்ளார்.

எனவே தங்களுடைய நிலையை பார்த்த ஏ.டி.எம். காவலாளி தன்னிடம் இருந்த ரூ.20 நோட்டை தன் கணவரிடம் தந்ததாகவும் அதை வைத்து தாங்கள் டீ சாப்பிட்டதாகவும் கூறினார். அந்த நேரத்தில் ஏ.டி.எம் காவலாளி செய்த உதவி மிகப்பெரியதாக தனக்கு தோன்றியதாக சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.,பிரபல பாடகி சின்மயி மற்றும் அவரது கணவர் ராகுல் இன்று அமெரிக்காவில் இந்தியா வந்ததாகவும், தங்களிடம் ரூ.100 நோட்டு இல்லாததால் டீ குடிக்க கூட முடியாமல் இருந்த நிலையில் ஏ.டி.எம் காவலாளி தனது கணவருக்கு ரூ.20 கொடுத்து உதவியதால் தாங்கள் டீ குடித்ததாகவும் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

தான் அமெரிக்காவில் இருந்தபோது மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வந்ததாக கூறிய சின்மயி, இன்று காலை விமான நிலையத்தில் இருந்து இறங்கியதும் டீ சாப்பிட தங்களிடம் ரூ.100 நோட்டு இல்லாததால் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க முயன்றதாக கூறினார். ஆனால் ஏ.டி.எம்-ல் காலை பத்து மணிக்கு பணம் நிரப்பினால் இரண்டு மணி நேரத்தில் காலியாகிவிட்டதாக ஏ.டி.எம் காவலாளி கூறியுள்ளார்.

எனவே தங்களுடைய நிலையை பார்த்த ஏ.டி.எம். காவலாளி தன்னிடம் இருந்த ரூ.20 நோட்டை தன் கணவரிடம் தந்ததாகவும் அதை வைத்து தாங்கள் டீ சாப்பிட்டதாகவும் கூறினார். அந்த நேரத்தில் ஏ.டி.எம் காவலாளி செய்த உதவி மிகப்பெரியதாக தனக்கு தோன்றியதாக சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.,
Share
Banner

Post A Comment: