பாலிவுட் சினிமாவின் பாட்ஷாவாக, சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஷாரூக்கான். இன்றைக்கு முன்னணி நடிகராக இருக்கும் ஷாரூக், ஒருகாலத்தில் பட வாய்ப்பிற்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கியிருக்கிறார்.
சமீபத்தில் ஷாரூக் அளித்த பேட்டி ஒன்றில் தான் இந்த நிலைக்கு வர காரணம், நடிகர் அர்மான் மாலிக் தான், அவருக்கு என் நன்றி என்று கூறியுள்ளார். ஷாரூக்கான் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு அர்மான் மாலிக் எப்படி காரணமாவார் என்று கேட்கிறீர்களா..?, ஆம் அதற்கு காரணம் உள்ளது.
ஷாரூக்கான் ஹீரேவாக நடித்து முதன்முதலில் வெளியான படம் ‛தீவானா'. இதில் ரிஷி கபூர், திவ்யா பாரதி ஆகியோருடன் அர்மான் மாலிக் தான் முக்கிய ரோலில் நடித்தார். படத்தின் ஷூட்டிங் பாதிக்கு மேல் முடிந்த நிலையில் திடீரென அர்மான் மாலிக், அந்தப்படத்திலிருந்து விலகிக்கொள்ள, அந்த இடத்திற்கு ஷாரூக் மாற்றப்பட்டார்.
முதல்படமே அவருக்கு ஹிட்டாக அமைய, தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக தற்போது உயர்ந்துள்ளார். ஆக இன்று ஷாரூக்கான் சூப்பர் ஸ்டாராக வலம் வர முக்கிய காரணமாக இருந்தவர்களில் அர்மான் மாலிக்கும் ஒருவர் என்பது ஹைலைட்.



Post A Comment: